Sunday, April 8, 2012

72 வயதில் பட்டதாரியாகி இலங்கைப் பெண் சாதனை

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவில் 72 வயதான வயோதிபப் பெண் ஒருவர் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அறிவுப் பயணத்திற்கு வயது தடையாக அமையாது என்பதை இவர் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

10 வருடங்களுக்கு மேலாக தாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இலக்கினை அடைந்துதுள்ளதாகவும், இது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி, வெலிவிடகே பகுதியில் பிறந்த கருணா வெலிவிடகே என்பவரே 72 வயதில் பட்டத்தினை பெற்று சாதனை புரிந்துள்ளார். தற்போது மருதானை பிரதேசத்தில் வசித்து வரும் இவர் ஆசிரியையாக தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

இந்த விடயம் அனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணம் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கின்னஸ் சாதனைகள் தொடர்பான செயற்குழுவிற்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com