நைஜிரீயாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி. பாதிப்புகளுடன் பிறந்துள்ளன.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜிரீயா விலுள்ள தென்கிழக்கு மாகாணங்களான ஒகூன், ஈடோகோ, ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடத்திய ஆய்வில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும்பேதே எச்.ஐ.வி. பாதிப்புகளுடன் பிறந்திருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இதனை தவிர கர்ப்பமான பெண்கள் சிலருக்கும் எச்.ஐ.வி. பாதிப்புகள் இருப்பதாகவும், போதிய மருத்துவ வசதியின்றி பெண்கள், குழந்தைகளுக்கு காசநோய், மலேரியா, உள்ளிட்ட நோய்களால் அதிகம் பாதித்திருப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment