24 மணித்தியாலங்களில் திடீர் அனர்த்தங்களால் 228 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கடந்த 24 மணித்தியாலங்களில் திடீர் அனர்த்தங்களுக்கு இலக்கான 228 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் டொக்டர பிரசாத் அரியவங்ச் தெரிவித்துள்ளார்.
இவற்றில் வீட்டு விபத்துக்கள் மூலம் காயமடைந்த 49 பேரும் வன்முறைகள் மூலம் காயமடைந்த 36 பேரும் புத்தாண்டு விளையாட்டுக்கள் மூலம் காயமடைந்த 11 பேரும் வாகன விபத்துக்களால் காயமடைந்த 60 பேரும் அடங்குவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை பட்டாசு மற்றும் வான வேடிக்கை விபத்துக்களினால் காயமடைந்த எவரும் சிகிச்சைகளுக்காக சமூகமளிக்கவில்லை என திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment