அமெரிக்கா தலைமையில் நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்ககைளுக்கு ரஷ்யா எதிர்ப்பு
மனித உரிமை என்ற போர்வையில் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகள் ஒரு சில நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமை பேரவையில் உரையாற்றிய ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கெனடி கெட்லொக் மேற்படி நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா மட்டுமல்லாமல், இங்கிலாந்து தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செயற்படும் விதம், தவறானது எனவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
மனித உரிமை பேரவையென்பது, உலகில் பலம் வாய்ந்த நாடுகள் சிலவற்றில் தனிச்சொத்து அல்லவென கூறியுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் தன்னிச்சையாக செயற்படும் சுயநல போக்கு கொண்ட ஒருசிலரின் தேவையின் பிரகாரம், ஒரு சில நாடுகளுக்கு, அழுத்தங்கள் கொடுப்பதை, அனுமதிக்க முடியாது எனவும் இதனை ஏகாதிபத்திய சக்திகள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்றும், சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment