சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுப்பது வேடிக்கையானது- சஜித்
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுப்பது வேடிக்கையாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
ஜெனீவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை குறித்து கருத்து தெரிவித்த போதோ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள்,தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அரசே உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்தது.அதன் அங்கத்தவர்களையும் அரசே நியமித்தது.இக்குழுவில் அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இல்லை.ஆனால் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுப்பது வெட்கக் கேடானது.
இலங்கையில் புலிப் பயங்கரவாதம் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தோற்கடிக்கப்பட வேண்டியதாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு நாம் நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும். இந்த அரசு புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றது.யுத்தத்தை வென்ற அரசுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment