ஆபாச படங்களை பாடசாலை மாணவர்களுக்கு காண்பித்த பிரதி அதிபர் கைது
ஆபாச படங்களை பாடசாலை மாணவர்களுக்கு காண்பித்து மாணவர்களை பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தி வந்த உடதும்பர பிரதேச பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை உடதும்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக தெரியவருவதாவது பாடசாலை விட்ட பின்னர் பிரதி அதிபரின் தனியான அறை ஒன்றில் கணனி கருவி மூலம் ஆபாச படங்களை மாணவர்களுக்கு காண்பித்து பாலியல் குற்றம் புரிந்து வந்துள்ளார்.
இது பெற்றோர்கள் சிலர் உடதும்பரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட பிரதி அதிபரை கைது செய்துள்ளதுடன் அவரது அறையிலிருந்த கணனி கருவி மற்றும் சில இருவட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறு மாணவர்களை பாலியல் குற்றச் செயலில் ஈடுபடுத்தியதாக பிரதி அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment