Friday, March 30, 2012

ஊடக அபிவிருத்தி மத்திய நிலையம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

தகவல் ஊடகத்துறைக்கு நவீன வசதிகள் வழங்கும் முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஊடக அபிவிருத்தி மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலை மற்றும் ஊடகத்துறையில் சிறந்த சேவை புரிந்த 11 பேரை ஜனாதிபதி கௌரவித்து விருதுகளை வழங்கியதுடன், ஊடக அபிவிருத்தி மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

374 மில்லியன் ரூபா செலவில ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள ஊடக அபிவிருத்தி மத்திய நிலைய கட்டடத்தில் நவீன வசதிகள் கொண்ட கேட்போர் கூடம் , ஊடக ஆய்வுக்கான நூலகம், இரு கணனிப் பிரிவுகள், அரசாங்க திரைப்படப் பிரிவின் நூதனசாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com