ஈரானிலிருந்து இந்தியா எண்ணை இறக்குமதி!அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ளும் இந்தியா
ஈரானிலிருந்து இந்தியா எண்ணை இறக்குமதி விடயத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுத்துவருகின்றது. இது தொடர்பில் அமெரிக்க பத்திரிகைகள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் வருகிற ஜுன் மாதத்துக்குள், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை இந்தியா குறைத்துக் கொள்ளாவிட்டால், அதன் மீது பொருளாதார தடை விதிக்கும் நிலைக்கு ஒபாமா அரசு தள்ளப்படும்' என்று கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- அந்த செய்தி யூகத்தின் அடிப்படையானது என மழுப்பல் ஒன்றை செய்துள்ளார். அத்தகைய முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் ஈரான் எண்ணெய் இறக்குமதி விவகாரம் தொடர்பாக, இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எனவும் ஈரானின் எண்ணெயை சார்ந்து இருப்பதை குறைக்கப் போவதாக இந்தியா கூறி இருப்பதை, சாதகமான மாற்றமாக கருதி வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
அணுகுண்டு தயாரிக்கவிடாமல் ஈரானை தடுப்பதில், இந்தியா எங்களது மதிப்புமிக்க கூட்டாளி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவிற்கு அமெரிக்கா ஒரு அழுத்தத்தை கொடுக்கின்ற அதேநேரம் ஆசியாவிலே அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இந்தியாவே என்பதை அவரது கருத்து வெளிப்படுத்தியுள்ளது.
...............................
0 comments :
Post a Comment