Saturday, March 17, 2012

அதிபரின் சகோதரி ஒப்புதல் பாக்.கில் இந்து பெண்களை மதம் மாற்றுவது உண்மைதான்

'பாகிஸ்தானில் இந்து பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவது உண்மைதான்' என்று அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் சகோதரி ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து பெண்களை கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த வழக்கு ஒன்றில், Ôகடத்தப்பட்ட 3 இந்து பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் அதிபர் சர்தாரியின் சகோதரியுமான அஸ்ரா பாசல் எம்.பி. பேசுகையில், 'சிந்து மாகாணத்தில் உள்ள சில இந்து பெண்களை கடத்தி சென்று மதரசாக்களில் அடைத்து வைத்த சம்பவம் உண்மைதான். அவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிந்து மாகாணத்தில் இந்து பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு தேவையான சட்டத்தை கொண்டு வரவேண்டும். கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும்' என்றார். இவரது கருத்தை ஆதரித்து மற்றொரு ஆளும் கட்சி எம்.பி. நபீசா ஷாவும் நாடாளுமன்றத்தில் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com