ஜே வி பி கிளர்ச்சிக் குழுவின் புதிய கட்சி முற்போக்கு சோசலிச கட்சி
ஜே வி பியில் இருந்து விலகிச் சென்ற கிளர்ச்சிக் குழு, முற்போக்கு சோசலிச கட்சி என்ற பெயரில் தமது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கட்சியினால் இந்த பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியின் பொது மாநாடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஜே வி பியின் கிளர்ச்சிக்குழு தமது கட்சிக்காக பல்வேறு பெயர்களை பரிசீலித்ததுடன், அதில் புதிய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
0 comments :
Post a Comment