பிரித்தானிய பா.உ க்கள் இருவர் வடக்கு மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு விஜயம்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் 8 பேர் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கொண்ட குழுவொன்று, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில், புனர்வாழ்வு பயிற்சி பெறும் எல்ரிரிஈ உறுப்பினர்களை சந்தித்து பேசியுள்ளது.
எல்ரிரிஈ அமைப்பின் முன்னாள் உறுபபினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டங்கள் மற்றும் வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை அவதானித்த புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள், வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
புனர்வாழ்வு பெறும் எல்ரிரிஈ உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரசசினைகள் எவையென, இவர்கள் எல்ரிரிஈ உறுப்பினர்களிடம் வினவிய போது, தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென, எலரிரிஈ உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், வாழ்க்கை தொடர்பாக எதிர்பார்ப்பும், இலட்சியமும் தங்களுக்கு இருப்பதாகவும், அவர்கள், புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளனர். வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிககைகள் தொடர்பாக, வவுனியா மாவட்ட செயலாளர் திருமதி. பீ.எஸ்.எம். சார்ள்ஸ், இக்குழுவினருக்கு உரிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment