இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிப்பு
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை, நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்பிடத்தக்க அவதானம் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படல், கடத்தல் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள், அரசியல் தீர்வு குறித்த விசாரணைகள் போன்ற விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்த அறிக்கையில் ஆராயப்படாமை குறித்து, அமெரிக்க தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய மூன்று பரிந்துரைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
முதலாவதாக, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பரிந்துரைகள் விரைவில் அமுலாக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பில்;, இதுவரையில் அரசாங்கம் மேற்கொண்ட முனைப்புகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முன்னெடுப்புகள் குறித்த திட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாக, இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதோடு, இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள், மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து, எதிர்வரும் 23வது மனித உரிமைகள் மாநாட்டின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக் வேண்டும்.
இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும் என அமெரிக்கா தமது பிரேரணயில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இப்பிரேரணை தொடர்பிலான உப மாநாடொன்றினை அமெரிக்கா இன்று (08) ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக போராட தயார் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும்இ இலங்கையின் நிலைப்பாட்டை பல நட்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதனால் பிரேரணைக்கு எதிராக போராடுவோம் என தமரா குணநாயகம் சவால் விடுத்துள்ளார்.
1 comments :
புலியின் முன்னர் முழங்காலிடாமல் இருந்த ஜனாதிபதி சர்வதேசப் புலிப் பயங்கரவாத சத்திகளிடம் அடிபணியாது வெற்றி வாகை சூடுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
Post a Comment