மட்டக்களப்பில் தற்கொலைக்கு முயற்சித்த நீர்கொழும்பு பெண்
மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நீர்கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் காப்பற்றப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தினுள் நீர்கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன் போது இப் பெண்ணை பின் தொடர்ந்து வந்த அப்பெண்ணின் கணவர் தனது மனைவி பாலத்தினுள் விழுவதை கண்டதையடுத்து கனவனும் பாலத்தினுள் வீழ்ந்து மனைவியை காப்பாற்றியுள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த இப் பெண்ணும் அவரது கணவரும் மட்டக்களப்பில் தொழில் புரிந்து வருகின்றனர்.
இவர்கள் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கனவன் மனைவி தகராறு காரணமாகவே இப் பெண் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு எனவும் மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment