Thursday, March 15, 2012

அமெரிக்காவில் ஒரு வயது மகனை தண்ணீரில் அமுக்கி கொன்ற இந்திய பெண்

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது, பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது அதன் காரணமாக இவனை கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com