Thursday, March 15, 2012

சனல் 4 வெளியீடு மீது சீறிப்பாய்கிறது தேசிய சுயாதீனத் தொலைக்காட்சி

தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் பெயரில் சனல் 4 தொலைக்காட்சி சுமார் ஒரு மணிநேரம் நீளமான ஆவனப்படம் ஒன்றை நேற்று இரவு வெளியிட்டது. இவ்வெளியீடானது இலங்கைக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சிகளுக்கு உதவும் வகையில் செனல் 4 அலைவரிசையின் சூழ்ச்சிகரமான செயல்பாடு என இலங்கை தேசியத் சுயாதீன தொலைக்காட்சி சேவை குற்றஞ்சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக சுயாதீன தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செனல் 4 அலைவரிசை இலங்கைக்கும் இராணுவ வீரர்களுக்கும்  எதிராக புதிய சூழ்ச்சிகரமான காணொளியை பிரிட்டன் நேரப்படி நேற்றிரவு அதாவது இலங்கை நேரப்படி இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.

எல்ரிரிஈயை தோல்வியடையச் செய்த மனிதாபிமான நடவடிக்கைகளை விமர்சித்து செனல் 4 தயாரித்த சகல காணொளிகளும் சர்வதேச மாநாடுகளை இலக்காக கொண்டு வெளியிடப்பட்டு வருவது அவர்களது உண்மையான சுய வடிவை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டிலும் இம்முறையும் இலங்கை தொடர்பாக அவர்களது காணொளி ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறும் போதே வெளியிடப்பட்டது. போலியான காட்சிகளுடன் மேற்கு நாட்டு தலைவர்களின் உள்ளங்களை நெகிழச் செய்து அதன் பயன்களை இலங்கைக்கு எதிராக திணிப்பதற்காக சனல் 4 அலைவரிசை தொடர்ந்தும் முயற்சி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட காணொளி காடசிகள் தொடர்பாக   இலங்கை மற்றும் அரசாங்கம் வழங்கிய பதில்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு பதிலான இம்முறை வெளியிடப்பட்டுள்ள காணொளி மூலம்  தமது ஒளி நாடாவிற்கு கிடைத்த சர்வதேச வரவேற்பை மிகைப்படுத்தி வெளிக்காட்ட முயற்சித்துள்ளது.  

சனல் 4 அலைவரிசை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்கவின் கருத்தையும் இதில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். லண்டனில் வசிக்கும் தனது 28 வயது புதல்வர்  சனல் 4 காணெளியை கடந்த ஆண்டு  பார்த்து கடும் வேதனையடைந்ததாகவும் இலங்கையர் ஒருவராக தான் இருப்பது குறித்தும் ஒரு சிங்களவராக இருப்பது குறித்தும் தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டு கால கசப்பான வரலாற்றை கொண்ட சனல் 4 அலைவரிசையின் சர்ச்சைக்குரிய மக்களின் கண்டனத்திற்குரிய நிகழ்ச்சிகளை வெளியிடுவதன் ஊடாக மக்களின்  அதிர்ப்திக்கு ஓரிரு முறை உட்பட வில்லை. அது பலமுறை மக்களின் அதிர்ப்தியை சம்பாரித்துள்ளது. இவ்வாறு பொய்யான அடிப்படையற்ற மக்களை பிழையன வழியில் இட்டுச் செல்லும் செய்திகளை வெளியட்டு அதன் மிலேச்சத்தனத்தை தனது அறிவிப்பாளர்களுடாக வெளியிட்டு சனல் 4 அலைவரிசை வரலாற்றில் அபகீர்ததிக்கு உட்பட்ட விதத்தை நாம் அதற்கு முன்னரும் வெளியிட்டிருந்தோம்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சனல் 4 காணொளி அடங்கிய காட்சிகளின் உண்மை நிலை தொடர்பாக இலங்கையில் எழுப்பிய கேள்விகளுக்கு எந்தவித பதிலையும் வழங்க சனல் 4 தவறிவிட்டது. மோதல்களின் போது கொல்லப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினரான இசைப்பிரியா எனும் புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் யுத்தம் இடம்பெற்ற போது வடக்கிற்கு சென்று சனல் 4 அலைவரிசைக்காக போலியான திரைப்படம் தயாரித்து விட்டு தற்போது லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை எழுபபிய கேள்விகளுக்கு அவர்களது புதிய காணொளி மூலம் பதில் வழங்கவில்லை. அதற்கு பதிலாக மிலேச்சத்தனமான பயங்கரவாத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது இளைய மகன் ஆகியோரின் மரணத்தை வெளிகாட்டி இவற்றை யுத்த அநீதிகள் என குறிப்பிடும் முயுற்சியில் சனல் 4 இம்முறை ஈடுபட்டுள்ளது பல இலட்ச கணக்கான நிராயுதபாணியான பொது மக்களை கொலை செய்து மனித குண்டுகளை தயாரித்து 30 ஆண்டுகளாக உலகில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய குடும்பம் ஒன்றின் மரணம் தொடர்பாக கண்ணீர் சிந்தும் சனல் 4 அலைவரிசை ஆப்கானிஸ்தானிலோ ஈராக்கிலோ லிபியாவிலோ தலைவர்கள் மட்டுமன்றி அப்பாவி பொது மக்கள் படுகெலை செய்யப்படுவதை சனல் 4 நிகழ்ச்சிகளாக வெளியிடவில்லையென்பதை இங்கு கூறி வைக்க வேண்டும்.

எல்ரிரிஈ யினரின் தேவைக்காக மட்டும் இலங்கைக்கு எதிராக சர்வதேச வேலைத்திடடங்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச சமூகத்தினை தூண்டி விடுவதே சனல் 4 வின் முயற்சியாகவுள்ளது.  மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பல இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்ததையோ  பயங்கரவாத தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உயிர்கள் பாதுகாக்கப்ட்ட விதத்தையோ சனல் 4 குறிப்பிடவில்லை.;.

இறுதி சமரின் போது தப்பி வந்த தமிழ்ச் செல்வனின் மனைவி இன்றும் பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடனும் சகல வசதிகளுடனும் வாழ்ந்து வருகின்றார்.

இறுதி போரின் போது கடலில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவியும் கருத்து தெரிவித்தார்.
 
இவற்றை உலகிற்கு மூடி மறைக்க முயற்சிக்கும் சனல் 4 30 ஆண்டுகளாக வடக்கின் அப்பாவி சிறுவர்கள் அழிpக்கப்பட்டதை ஒரு போதும்  சனல் 4 குறிப்பிடவில்லை. பலாத்கார பயிற்சியிலிருந்து தப்பி சென்ற வடபகுதி தமிழ் சிறார்களின் கால்கள் வெட்டப்பட்டு  பயங்கரவாதிகள் அவர்களுக்கு இழைத்த இன்னல்களை மறந்து விட முடியாது.
 
இவ்வாறான சமபவங்களை உலகிற்கு மூடி மறைக்க முயற்சிக்கும் சனல் 4 வின் சூழ்ச்சிகரமான முயற்சிக்கு  தூபமிடுவோருக்கு தாயகத்திற்கு எதிரான இலங்கையர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை மீது சேறு  பூசும் கூட்டு முயற்சியில் சனல் 4 வும் தாயகத்திற்கு எதிரான இலங்கையின் சந்தர்ப்பவாதிகளும்  பல இலட்ச கணக்கான டொலர்களை பெற்று வருகின்றார்கள் என்பது உண்மையாகும். இவை  பாரிய குற்றச்சாட்டுக்களாகும். இதன் ஊடாக இவர்கள் நாட்டிற்கு எதிராக ஒரு கறுப்பு புள்ளியையும் வைக்கிறார்கள் சமாதானத்தை வென்றெடுத்து உலக வென்றெடுக்கும் முயற்சிக்கும் கௌரவமான தேசத்தின் புகழுக்காக அதன் அனைத்து பிரஜைகளுக்கும் தமது தேசிய பொறுப்பை மீண்டும் சிந்திப்பதற்கான தீர்க்கமான காலம் வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com