நாட்டின் அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு திட்டங்கள் வகுகப்பட்டுள்ளன.
215 மெற்றிக் தொன் அரிசி அடுத்த வருடம் ஏற்றுமதி செய்யப்படுமென அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான செயல்த்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக தரிசு நிலங்களில் அதிக விளைச்சாலை பெற கூடிய விதை நெல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உர மானியமும் இத்திட்டத்திற்கு மிகவும் உந்து சக்தியாக அமையுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைகளுக்காக நீர்பாசன அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் பூர்த்தியாக்கப்படவுள்ளன. அத்துடன் குளம் மற்றும் வாவிகளின் புனரமைப்பிற்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு பாசுமதி, சம்பா, மூலிகை அரிசி போன்ற வகை அரிசிகளை அதிகளவு ஏற்றுமதி செய்வதே அரசாங்கத்தின் நோக்காகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment