கல்முனையில் வீடுகளை இழந்த 200 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் சுனாமியினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த 200 குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான நிதியுதவி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இதற்கான நிகழ்வுகள் பெற்றன. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஆயிரத்து 100 இலட்சம் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடொன்றுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இதன் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரத்ன, அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment