ஆயர் ராயப்பு ஜோசப்பை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்கிறது ஹெல உறுமய
இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க கூடாது என ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது , மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளாதால் ஆயர்கள் சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் , அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் , ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பதானது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுத்து வருபவர். இதனால் புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய மேலும் குறிப்பிட்டுள்ளது.
1 comments :
தேசதுரோகி ராயப்பு ஜோசப்புக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
Post a Comment