Wednesday, March 14, 2012

இன முரண்பாடுகள் தீர்க்கப்படாதிருந்தால் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் - அமெரிக்கா

இன முரண்பாடுகள் தீர்க்கப்படாதிருந்தால் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புடைமை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது எனவும், இனங்களின் மீது கோபத்தை பிரயோகிப்பது , மீண்டும் வன்முறைகளை தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், மீளமைப்பு மற்றும் பொறுப்பேற்கும் தன்மை காணப்படாமையால், மீண்டும் வன்முறைகள் ஏற்பட்ட சூழ்நிலைகளை அனுபவரீதியாக கண்ணுற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments :

Arya ,  March 15, 2012 at 1:56 AM  

Mr. You can dreams only.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com