Tuesday, March 6, 2012

கிண்ணஸ் சாதனை படைக்க விரும்புவோர் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறவேண்டும்.

கிண்ணஸ் சாதனையை படைப்பதற்காக அபாயமிக்க விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் விளையாட்டு துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிண்ணஸ் சாதனையொன்றை படைக்க முயன்ற கந்தளாய் இளைஞர் ஒருவர் மரணத்தை தழுவியதையடுத்து விளையாட்டு துறை சார்ந்த அலோசகர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கந்தளாய் வான் எல பிரதேசத்தை சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை வீரரான ஜனக குமார பஸ்நாயக்க இதற்கு முன்னர் குழியொன்றில் இறங்;கி அதனை மூடி 5 அரை மணித்தியாலம் சாதனையை ஏற்படுத்துவதற்கான ஒத்திகை பயிற்சியொன்றை மேற்கொண்டார். அதன் இறுதி கட்டமாக நேற்று மாலை வழமை போன்று தமது வீட்டின் பின்புறத்திலுள்ள 6 அடி குழிக்குள் இறங்கினார். குழியின் மேல் கூரைத்தகரங்களால் மூடி அதன் மேல் மண்ணை போட்டு தீ வைக்குமாறு அவர் தனது நண்பர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் 6 மணித்தியாலங்களுக்கு பின்னர் தன்னை குழியிலிருந்து மீட்குமாறும் நண்பர்களுக்கு அறிவித்திருந்தார். அவரது ஆலோசனையின் பிரகாரம் நேற்று மாலை 3.00 மணியளவில் குழியை திறந்து பார்த்த போது குமார பஸ்நாயக்க மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவர் கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபட்டபோது இடையில் மரணமானார்.

உலக சாதனையை ஏற்படுத்துவதற்காக கனவு கண்டு வந்த 25 வயது இளைஞர் தனது பாதுகாப்பு தொடர்பாக மிகவும் பொறுப்புடன் செயல்ப்பட்டிருந்தால் அவரது பெயர் நிரந்தரமாக மறைவதற்கு பதில் உலக சாதனை ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com