5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய நபருக்கு மரண தண்டனை
5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை விமானம் மூலமாக கடத்தி வந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன கடந்த செவ்வாய்க்கிழமை( 20-3-2012) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கல்பிட்டி முஸ்லிம் கிராமத்தை சேர்ந்த 51 வயதுடைய திருமணமாகாத நபருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரதிவாதி 1989 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது 5 கிலோ nஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயணப் பொதியின் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் nஹரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளால்; அது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment