36 வயதுடைய நபர் ஒருவர் மனைவியின் சகோதரியுடன் தற்கொலை.
கொஸ்கொட - இதுருவ பகுதியில் உள்ள விருந்தகத்தின் அறையொன்றிலிருந்து ஆண் ஒருவரதும பெண் ஒருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.36 வயதுடைய ஆண் கடுவளை பகுதியையும்,24 வயதுடைய பெண் கண்டி குண்டசாலை பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில்,இன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரவு முழுவதும் குறித்த நபர் மது அருந்தியுள்ளமை விருந்தக அறைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் 36 வயதுடைய குறித்த ஆண் மரணமான பெண்ணுடைய சகோதரியின் கணவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment