முல்லைத்தீவு தேர்தலில் 3 ஆயிரம் பேர் தகுதியிருந்தும் வாக்களிக்க முடியாத நிலை-பவ்ரல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப்பற்று மற்றும் புதுக்குடியிறுப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாத நிலiமை ஏற்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் தகைமைகள் இருந்த போதும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இன்மையினால் இந்நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாம்மால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இடப்பெயர்வின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட முகாம் அடையாள அட்டைகளை வாக்களிப்பில் பயன்படுத்த அனுமதிக்குமாறு பெவ்ரல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தங்கியிருக்கும் பெரும்பான்மையான மக்களிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எந்தவித ஆவணங்களும் இல்லையெனவும் பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment