புலிகளின் தற்கொலை உறுப்பினர்கள் 200 பேர் மறைந்து வாழ்வதாக தகவல்
யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் ஒளிந்திருந்து தப்பியோடிய 200 பேர் வரையான புலிகள் இயக்க தற்கொலை பிரிவை சேர்ந்தவர்கள் பல்வேறு வகைகளில் நாட்டின் சிவில் சமூகத்தில் மறைந்து வாழ்வதாக புலனாய்வு பிரிவினருக்கு தெரிய வந்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மறைந்து வாழும் தற்கொலைப் படையாளிகள் முஸ்லிம் மற்றும் இந்து சமய பக்தர்கள் போன்று சமூகத்தில் மறைந்திருப்பதாக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள இது போன்று மறைந்து வாழ்ந்த தற்கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் 100 பேர் வரையான பயங்கரவாதிகள் சுவிற்சர்லாந்து , இந்தியா , இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு தப்பியோடியுள்ளதாகவும் , அவர்கள் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைதுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
0 comments :
Post a Comment