புலிகளால் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய வாகனங்களில் கிளிநொச்சியில் மீட்பு
தமிழீழ விடுதலைப் புலிகளால் குண்டுவெடிப்புக்கள் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்த பயன்படுத்துவதற்கு என தயார்ப்படுத்தப்பட்டு இருந்த ஒருதொகை எரிபொருள் தாங்கி வாகனங்களை வெடிபொருட்களுடன் நிலத்துக்கு அடியில் இருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற புலிப் பிரமுகர் ஒருவர் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே தேடுதல் வேட்டை வெற்றிகரமாக நடத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகரில் காட்டுப் பகுதியில் இருந்து மீட்டு பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இவைகள் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான கபில் அம்மான் என்பவரின் பொறுப்பில் இருந்த நீலவன் தளம் இருந்த இடத்தில் மேற்கொண்ட பாரிய சுற்றுவளைப்புத் தேடுதலின்போது இவை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குண்டுத் தாக்குதல்கள்இ தற்கொலைத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு தேவையான எரிபொருள் தாங்கிகள் இத்தளத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வெடிபொருட்களுடன் கூடிய வாகனங்களுடன் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் மீதும் பொது இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தவென இவ்வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டு இருந்தாக தெரிவிக்கப்பட்டது
0 comments :
Post a Comment