கொழும்பு மேயரின் உத்தியோக இல்லத்தை அரசியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்த நீதிமன்றம் தடைஉத்தரவு
கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் எதிர்கட்சி தலைவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் மொஹமட் மஹ்ருப் சமர்பித்த மனுவை ஆராய்ந்ததன் பின்னர் நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் புரனமைக்கப்படும் காலப்பகுதியில் அதன் பணிகளை கொழும்பு மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நகர சபையின் பணிகளுக்கு அன்றி வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானதென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மனு மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய தினம் விளக்கமளிக்குமாறு நகர மேயர் மொஹமட் முஸ்ஸம்மில் உட்பட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment