Tuesday, February 28, 2012

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத்துரோகிகளாம் !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உpமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்பிக்கவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று நவசமாசக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இன பேதமுடைய அமைச்சர்களின் கேலிச் செயலே இதற்கெதிரான ஆர்ப்பாட்டமாகும் . இது முற்றிலும் அரச விரோத செயலாகும். இது போன்று மக்கள விரோத, தேசத்துரோக செயற்பாடுகளில் யாரும் பங்கு பற்ற வேண்டாம்.

மனித உரிமை பேரவைக்கு வந்துள்ள சக்திமிகு நாடுகள் , கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பிரேரணைகளை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் , இல்லையேல், அவை வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளன. அப்படியாயின் இவர்கள் பேரணி செல்வது எதற்காக என்று கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிட்டுள்ளார் .

2 comments :

navam ,  February 28, 2012 at 6:43 PM  

இவன் அமெரிக்காவின் கைகூலி என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்.

Anonymous ,  February 29, 2012 at 2:11 PM  

அமெரிக்காவின் தலைமையில் தோழர் புரச்சி செய்கிறார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com