மாணவியை கடத்திச்சென்ற வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
தனியார் வகுப்பிற்கு சென்ற சமயம் 15 வயது மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் தேடப்பட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01ம் திகதி தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வடமராட்சி இந்து மகளீர் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயது பாடசாலை மாணவி சென்றார்
இதன்போது குறித்த மாணவியை கடத்திச்சென்றதாக மாணவியின் பெற்றோரால் பருத்தித்துறைப்பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட வழகில் தேடப்பட்ட குற்றவாளியை தாவடியில் வைத்து யாழ்ப்பாணப்பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இவர் குறித்த மாணவியை கடத்தி முழங்காவிலில் கொண்டு சென்று வைத்திருப்பதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்ய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இவரையும் குறித்த பெண்ணையும் கடந்த 24ம்திகதி யாழ்ப்பாணப்பொலிஸார் தாவடியில் உள்ள இளைஞரின் சகோதரர் ஒருவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இவர்கள் இருவரையும் கடந்த 25ம் திகதி பருத்தித்துறை பதில் நீதிவான் ஏ.கே நடராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்க மறியிலில் வைக்க உத்தரவிட்டதோடு குறித்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துசிகிச்சைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment