தகுதியிருந்தும் இடமாற்றம் கிடைக்காத வன்னிஆசிரியர் தொடர்பு கொள்ளவும்-இலங்கை ஆசிரியர் சங்கம்
இடமாற்றம் பெறத்தகுதியிருந்தும் இடமாற்றம் கிடைக்காத வன்னிப்பகுதி ஆசிரியர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க வடமாகாணப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
வன்னிப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற தகுதியிருந்தும் இடமாற்றம் கிடைக்காத ஆசிரியர்களையே இவ்வாறு உடனடியாக கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இதன்போது அதிகஸ்ரப்பிரதேசங்களில் 4 வருடமும் கஸ்ரப்பாடசாலை 5 வருடமும் ஏனைய பாடசாலைகளில் 6 வருடங்களில் கடமையாற்றியவர்கள் இடமாற்றம் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாவார்கள்.
அதிககஸ்ரப்பாடசாலைகைள கவனத்தில் கொள்ளும் போது தற்காலிக இணைப்பில் கடல் கடந்த தீவுகளில் கடமையாற்றியவர்களும் அதிகஸ்ரப்பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படவேண்டும்.
குறிப்பாக வெளிவேறு மாவட்டங்களில் கடமையாற்றியிருந்தாலும் கஸ்ரப்பிரதேச காலங்கள் சேர்த்தே கனிக்கப்படவேண்டும் எனவே மிக விரைவாக தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment