Monday, January 2, 2012

குறுந்தூர ஏவுகணையை பரீட்சித்தது ஈரான். ஆத்திரத்தில் அமெரிக்கா!

ஈரான் குறுந்தூர ஏவுகனை சிலவற்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அருகிலுள்ள பேர்ஸியன் வலைகுடாவில் இடம்பெற்று வரும் கடற்றொழில் பயிற்சியின் போது இந்த ஏவுகனைகள் நேற்று சோதனையிடப்பட்டதாக இர்னா செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகனை ஒத்திகை ஈரானின் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதே வேளை ஈரானுக்கு எதிராக தொடர்ந்தும் தடை விதிக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com