Thursday, January 12, 2012

கனடாவில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை! கனடிய தபால் துறைத் தலைவர்.

தோற்கடிக்கப்பட்ட புலிகள் தமது இருப்பை வெளிக்காட்டுவதற்காக இலங்கையில் ஒரு சுவரொட்டியை கூட ஒட்டமுடியாத நிலையில, புலம்பெயர் தேசத்திலிருந்து தமது பணப்பலம் ஊடாக இங்குள்ள நிலைமைகளை சீர்குலைக்க முயன்று வருகின்றனர். அதன்பொருட்டு அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு முயற்சியே தபால் முத்திரை தலைகளாகும்.

பிராண்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இவ்வாறான புரளிகள் கிளப்பப்பட்டுள்ளது. கனடாவில் முத்திரைகள் வெளிவந்ததாக நிலவும் செய்தி தொடர்பாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கனடா தபால் கூட்டுதாபனத்திடம் தனது ஆட்சேபனையை கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.  

இக்கடிதம் தொடர்பாக உடனடியாக அவதானம் செலுத்தப்பட்டதாக கனடா தபால் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதுடன் , உடனடியாக விசாரணையொன்றும் இடம்பெற்றது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் எந்தவொரு முத்திரையம் கடனாவில் அச்சிடப்படவில்லையென்றும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லைனெ;றும் இவ்விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.  தீவிர கண்காணிப்பின் கீழ் செயல்ப்படும் கனடா முத்திரை பிரிவின் கீழ் பயங்கரவாதிகளால் இது போன்ற முத்திரைகளை அச்சிட முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 
 
இதன் பிரகாரம் பயங்கரவாதிகளின் முயற்சிகளினால்  மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியை கனடாவின் உத்தியோகபூர்வ முததிரையென நம்பச் செய்வதற்கு ஒரு சில குழுக்கள்  போலி பிரசாரங்களை மேற் கொண்டு வருவது தெரிய வந்துள்ளதாக கனடா தபால் கூடடுத்தாபனத்தின் தலைவர் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட்டமைக்காக, பிரான்ஸின், லா – போஸ்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதாக, பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தமது நிறுவனம் செய்த முதலாவது தவறு இதுவாகும் என லா – போஸ்ட் நிறுவனம் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்கள், பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வந்து மன்னிப்பு கோரியதாகவும் தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com