இலங்கை - கட்டார் நாடுகளுக்கடையில் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கட்டார் தலைவர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்;தையை அடுத்து அவர்களின் முன்னிலையில் இந்த ஒன்பது ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
கல்வி- உயர் கல்வி- மற்றும் விஞ்ஞான ஆய்வூகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கையொப்பமிட்டார்.
அத்துடன், மேற்படி இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உடன்படிக்கையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கையெழுத்திட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டரீதியான விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கைச்சாத்திட்டார்.
மற்றும் உல்லாசப் பயணத்துறை- கலாசாரம்- விமானப் போக்குவரத்துச் சேவை உட்பட மொத்தம் ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவற்றில் அரசின் சார்பாக கையெழுத்திட்டனர்.
0 comments :
Post a Comment