கெடாமல் பாதுகாக்கப்படும் வடகொரிய அதிபர் உடல்
வடகொரியா தலைவர் கிம்ஜாங்-2 (69) கடந்த டிசம்பர் 17-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் கிம்ஜாங்-யுன் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார். மரணம் அடைந்த கிம்ஜாங்-2 உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
தற்போது அவரது உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து நிரந்தரமாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அதிபர் கிம் ஜாங்-யுன் முடிவு செய்துள்ளார். உடல் பியாங்யாங்கில் அவர் வசித்த அரண்மனையில் வைக்கப்படுகிறது. அங்கு நினைவிடம் அமைத்து தினமும் மக்கள் அஞ்சலி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment