அமைச்சரவையில் மாற்றங்கள். பிரதமராக சமல் ராஜபக்ச நியமிக்கப்படலாம்.
இவ்வாரத்திற்குள் அமைச்சரை மாற்றங்கள் இடம் பெறவுள்ளதாகவும், இலங்கையின் 15வது பிரதம மந்திரியாக சபாநாயகர் சமல் ராஜபகஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றம், வெளிநாட்டு விவகார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, அரச நிர்வாகம் மற்றும் சுதேச விவகாரம், தோட்டக் கைத்தொழில், சுற்றாடல், சமய விவகார, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்குதல் வடிகாலமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் நிகழவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற சபாநாகர் பதவிக்காக சுகாதார அமைச்சர் மைத்திபால சிரிசேன அல்லது கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
அதில் பிரதம மந்திரியாக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படவார் என்பதில் நம்பகத்தன்மையான செய்திகள் உள்ளன. அவரை வரவேற்பதற்காக எதிர்வரும் 16 திகதி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு மட்டங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எனத் தெரியவந்துள்ளது.
தற்பொழுது கபினட் அமைச்சர்களாக பணியாற்றுபவர்கள் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
சிரேஷ்ட அமைச்சர்களான ரத்னசிரி விக்கிரமநாயக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண. கலாநிதி சரத் அமுனுகம கெபினட் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இணைந்து கொண்ட மொஹான் லால் சேரு பிரதிக் கல்வி அமைச்சராகவும் மனுஷ நானாயக்கார பிரதி ஊடகத்துறை அமைச்சராகவும் ஹேமால் குனசேகர, அருந்திக பெர்னாண்டோ உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
தற்பொழுது பிரதி அமைச்சர்களாகவுள்ள லகஷ்மன் யாப்பா அபேவர்தன ரோஹித அபேகுணவர்ன , பைசர் முஸ்தபா, உட்பட பலர் கெபினட் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment