நம்மவர்கள் 77 பேர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில்.
கொலை, கொள்ளை மற்றும் நிதி மோசடி போன்ற குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குப் பாய்ந்து தலைமறைவாகியுள்ள 77 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸ் (இன்டர் போல்) சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாரின் வேண்டுதலுக்கு இணங்க சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிக்கையின் அறிவித்தலை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டுக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் சட்ட மூலத்தின் அதிகாரங்களை மேற் கொண்டு இதற்காக இலங்கை நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஒழிந்துள்ள நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது மிக அவசியமாகும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment