Thursday, December 8, 2011

புலம்பெயர் தமிழ்க் கொள்ளையர்கள் லாசப்பலில் நடத்திய கொள்ளை முயற்சி!

பாரிஸ் நகரில் குட்டி யாழ்ப்பாணம் என வர்ணிக்கப்படும் லாச்சப்பலில் கடந்த சனியன்று பிற்பகல் வேளையில் கொள்ளை முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. பாரிசில் பிரபல வர்த்தக நிறுவனமான கோபால் அன் கோ வின் சகோதர நிறுவனத்திலிருந்து பணம் எடுத்துச் செல்லப்பட்டவேளையில் இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

தொலைபேசிஅட்டைகளின் கொள்வனவு தொடர்பான கொடுப்பனவுக்காக இந்தப் பணம் (அண்ணளவாக ஒரு லட்சம் யூறோ) குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களின் சகோதரரான திரு.நீலன் என்பவரால் அவர்களது வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வாகனம் ஸ்டர்லிங்கார்ட் மெற்றோ நிலையத்தை அண்மித்தவேளையில் சாரதி வாகனத்தை மெதுவாக நகர்த்தியவாறு பயணித்தபோது மூன்று தமிழ்இளைஞர்கள் காரை பலவந்தமாக திறந்து அதற்குள் ஏறி பணத்துடன் இருந்த திரு.நீலனிடமிருந்து பணத்தை பறித்தெடுக்க முயன்றுள்ளனர். நீலன் அவர்களிடம் பணத்தை கொடுக்காது போராடிய வேளையில் சாரதியின் உதவியை எதிர்பார்த்தபோது சாரதியாக இருந்த மயூரன் என்பவர் நீலனுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை.

இந்த நிலையில் கொள்ளையர்களில் ஒருவர் நீலனின் தொடைப்பகுதியில் கத்தியினால் குத்திவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு காரை விட்டு இறங்கி ஸ்ரலிங்கார்ட் மெற்றோவுக்கு அருகாமையிலுள்ள றூ கயில் ((Rue Caillie) என்ற சிறுவீதியினூடாக ஓடியுள்ளார்.

காலில் காயம்பட்ட நிலையிலும் நீலன் கொள்ளையர்களை துரத்திச் சென்ற போது அவர்கள் திசைக்கொருவராகப் பிரிந்து ஓடியுள்ளனர். பணத்துடன் ஓடியவரை குறிவைத்து நீலனும் சாரதியும்; துரத்திச் செல்லும் போது வீதியின் மறுமுனையில் நின்றிருந்த தமிழ் இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடியவரை தடுக்க முனைந்த வேளையில் பணத்துடன் ஓடியவர் பணத்தை அருகில் தரித்து நின்ற காரின் கீழ் எறிந்துவிட்டு சாதாரணமாக நடைபாதையில் நின்றிருக்கின்றார். இவரை அண்மித்ததும் அவரை இனம் கண்ட நீலன் மற்றைய இளைஞர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார். காரின் கீழ் இருந்த பணமும் மீட்கப்பட்டது.

இதேவேளை பணத்தை எடுத்துச் சென்ற வாகனத்தின் சாரதியே இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டவரென்றும் காரின் தானியங்கும் பூட்டுக்கள் இயங்க முடியாத நிலையில் வைக்கப் கொள்ளையர்கள் ஏறுவதற்கு ஏதுவாகவே காரின் வேகத்தை கட்டுப்படுத்தி காரைச் செலுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

பிரெஞ்சுக் காவல்துறையினர் சாரதியிடம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள விஸ்வன் என்பவர் பல வீடுகளுக்கு உரிமையாளர் என்றும் பாரிசின் புறநகர்ப்பகுதியான லூ புசே பகுதியில் வாடகை கார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகவும் தொலைபேசி அட்டை இன்டர்நெட் கபே ஒன்றின் உரிமையாளராகவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாகன சாரதியான மயூரன் என்பவர் தனது திருமணத்தின் போது திருமணப்பதிவு அலுவலகத்திலிருந்து திருமண மண்டபத்திற்கு ஹெலியில் பயணித்தவராகவும் இருந்துள்ளார்.

இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டாவது நபர் அன்ரன் என்று அழைக்கப்படுபவர். மூன்றாவது நபரும் ஒரு தமிழர் என்பதும் அவரது பெயர் விபரங்கள் வெளிவரவில்லை
தற்போது பணமுதலைகளே திட்டமிட்ட வகையில் தமிழர்களிடமே கொள்ளையடிப்பவர்களாக மாறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com