Thursday, December 22, 2011

த.தே.கூட்டமைப்பின் சுத்துமாத்து! போட்டுடைக்கின்றார் பா.உ யோகேஸ்வரன்.

அண்மையில் இலங்கையிலிருந்து இளைய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரித்தானியா சென்றுவந்தது. இக்குழுவுக்கு 40 வயதிற்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 40 வயதுக்கு உட்பட்டவராக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.உ யோகேஸ்வரன் என்பவர் உள்ளபோதும் அவர் இக்குழுவில் இணைந்து செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லா நபர் ஒருவரை கூட்டமைப்பு அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட நபர் சுமந்திரனின் நெருங்கிய உறவினர் அல்லது நெருக்கமானவர் என தெரியவருகின்றது.

இது தொடர்பாக இலங்கைநெற் பா.உ யோகேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் செல்லவில்லை எனக் கேட்டபோது, குறிப்பிட்ட பயணம் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர் மேலும் என்ன கூறினார் என்பதை , இங்கே கேட்கலாம்.



இப்பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை என உங்களுக்கு கூறிவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை அனுப்பியுள்ளார்களே, அதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, அவ்வாறு ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதாக தன்னிடம் பலரும் கேட்டார்களாம் எனவும், அதை தொடர்ந்து தான் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பாக தங்களுக்கும் தெரியாது என்றே தெரிவிக்கின்றனர் என தெரிவித்த அவர் மேலும் என்ன கூறினார் என்பதை இங்கே கேளுங்கள்.



பா.உ அரியநேந்திரனை இலங்கைநெற் தொடர்பு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்ட பயணத்திற்கு அனுமதிக்கப்படாதது ஏன் எனக் கேட்டபோது, பாராளுமன்றில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் இடம்பெறுகின்ற தருணத்தில் , எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இப்பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எவரும் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தால், யார் இந்த நபர்?

இப்படங்களில் பிரித்தானியா சென்றுள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ரகு பாலச்சந்திரன் என்ற நபர் கலந்து கொண்டுள்ளதை நீங்கள் காண்கின்றீர்கள்.





மேற்படி குழுவிற்கு பொருத்தமான பாராளுன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருக்கும்போது ரகு பாலச்சந்திரன் என்ற நபர் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்டார் என பா.உ சுரேஸ் பிறேமச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும் ரகுவின் பயணம் பிரத்தியேகமானது எனவும் கூறினார்,

ததேகூ சார்பாக எவரும் கலந்து கொள்ளவில்லை என முழுபூசணிக்காயை சோத்தினுள் புதைக்க முடியாது, ரகு பாலச்சந்திரன் என்பவர் கலந்து கொண்டதற்கான ஆதாரங்கள் உண்டு, இத்தெரிவு என்ன அடிப்படையில் இடம்பெற்றது என்ற விளக்கத்தை கூறமுடியுமா? எனக் கோரியபோது மண்டையன் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஸ் வழமையான பாணியில் இணைப்பை துண்டித்துக்கொண்டார்.

தொடர்ந்து மேற்படி குழுவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரித்தானியா சென்றுவந்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாருக் கை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக ரகு பாலச்சந்திரன் கலந்து கொண்டதை உறுதிப்படுத்தியதுடன் மேலும் என்ன கூறினார் என்பதை இங்கு கேட்கலாம்.



புலிகளுடன் இணைந்து நின்று தமிழ் மக்களின் தகுதிவாய்ந்த தலைவர்கள் யாவரையும் கொன்றொழித்த சம்பந்தன் தற்போது எவ்வாறு தனிராட்சியம் நடத்துகின்றார் என்பதற்கு மேற்படி சம்பவம் நன்கு சான்று பகர்க்கும்.

விரால் இல்லாக் குளத்திற்கு குறட்டை தலைவன் என்ற பழமொழிக்கு ஒப்ப தலைவனாகியுள்ள சம்பந்தன் தனக்கு தேவையான எடுபிடிகள் ஒரு சிலரை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தையும் ஏமாற்றுகின்றார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் இடம்பெற்ற மேற்படி பயணத்தை இலங்கை ஆரசினால் ஒழுங்கமைக்கப்பட்டது எனவும் அது தமிழர்களுக்கு எதிரானது எனவும் கூறி பாரளுமன்ற உறுப்பினர்களையே ஏமாற்றும் அளவிற்கு சம்பந்தன் குழு தொழிலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்நிலைமைக்கான காரணம் என்ன? தமிழ் மக்கள் தொடர்பாக இவர்கள் போட்டுள்ள எடையா? அன்றில் தமிழ் தலைவர்கள் யாவரையும் கொன்றொழித்ததன் பலாபலனா?

மேலும், மட்டக்களப்பு தமிழ் மக்களை இவ்வளவு கீழ்தரமாக எடைபோட்டு வைத்துள்ளார்கள் என்றும் கொள்ளலாமா? மட்டக்களப்பான் மடையன் லண்டனில் என்ன நடக்கின்றது என்பதை எங்கு அறியப்போகின்றான் என்பது சம்பந்தன் குழுவின் கணிப்பாக இருந்திருக்கலாமா?

ஆனாலும் இவ்விடயம் வெளிவந்தபோதும், அரியநேந்திரன் போன்ற கோடாரிக்காம்புகள், உரிமைக்காக குரல்கொடுக்காமல், அடுத்த தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்படி அராஜகத்தை நியாயப்படுத்துவதை எவ்வாறு அழைப்பது?

3 comments :

Anonymous ,  December 22, 2011 at 5:07 AM  

கூத்தனியின் சுத்துமாத்து உலகறிந்த விடயம்.
முன்னர் புலிக்கு வக்காளம் பாடி, சேவகனாக, அடிமையாக, செவிடனாக, குருடராகவிருந்து தங்கள் சுயநலத்தை பார்த்தவர்கள்.
இப்போ மட்டும் எப்படி தமிழ் மக்கள் மீது கரிசனை அல்லது அக்கறை படுவார்கள் ?? கடைசியில் தமிழருக்கு வந்த சந்தர்ப்பமும் கோட்டை விடப்போகுது.

Anonymous ,  December 22, 2011 at 10:31 AM  

Until the tamils realize what's going on , greater disasters would follow them.They were cheating the tamils from the very start upto now.
Cinema and the acting only a three(3)hours show,just to entertain the audience,but this drama will go on for ever and ever until the tamils come out of the blanket of illusions under which they're being covered.We think we could not no longer distinquish between illusion and reality.

பாமரன் ,  December 22, 2011 at 11:35 AM  

இலங்கை அரசாங்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டதால் நாம் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்தோம் - யோகேஸ்வரன்
பாராளுமன்றில் பட்ஜெட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக செல்லவில்லை- அரியநேந்திரன்
ரகு கலந்து கொண்டது தனிப்பட்ட விஜயம்- சுரேஸ் பிறேமச்சந்திரன்
ரகு ததேகூ வின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்- குனைஸ் பாருக்

என்னங்க தலை கிறுகிறுக்குங்க.

இலங்கைநெற் தயவு செய்து இன்னும் ரெண்டுபேருக்கு போண் பண்ணி போட்டிராதிங்கோ மயக்கம் போட்டு விழுந்திருவன்

பாராளுமன்ற உறுப்பினருக்கே, அல்வா இப்படி குடுத்திருக்கானுகள் என்றால் என்போன்ற பாரனின் நிலை என்ன ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com