Friday, December 16, 2011

நீர்கொழும்பு லாஸரஸ் வீதியில் டெங்கு காய்ச்சலினால் பலர் பாதிப்பு

நீர்கொழும்பு ,பெரியமுல்லை - லாஸரஸ் வீதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிரதேச வாசிகள் சிலர் தெரிவிக்கையில்,

லாஸரஸ் வீதியை சேர்ந்த பலர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வீதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு பிரதான பஸ் டிப்போ மற்றும் மூடப்பட்டுள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்தே டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்ததையடுத்து அதிகாரிகள் அண்மையில் வந்து பார்வையிட்டனர்.

இதனை அடுத்து பிரதேசத்தின் வடிகான்களில் இரண்டு தினங்களாக புகை அடிக்கப்பட்டன .ஆயினும் தொடர்ந்தும் பலர் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .சிறுவர்களும்,பெண்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகை அடித்தல் மக்கள் குடியிருப்புக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்றனர்.

மாநகர சபையின் சுகாதாரப்பிரிவினர் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பிரதேச மக்களின் கோரிக்கையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com