Thursday, December 15, 2011

ஆங்கிலம் தெரியாத உமக்கு லண்டன் போக வேண்டுமா?

சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு.

இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது என்ற பயிற்சியை வழங்குவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.

இப்பயிற்சிக்காக நமது பாராளுமன்றிலிருந்தும் 40 வயதுக்குட்பட்டவர்களை இன்ரர்நெஷ்னல் அலேட் சார்பாக வன் ரெக்ஸ்ட் இனிசியேட் என்கின்ற நிறுவனம் ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினர் என மேற்படி நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தமிழர் ஒருவரும். யார் இந்த தமிழர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேற்படி குழுவிற்கான தெரிவு என்ற விடயம் வந்தபோது கூட்டமைப்பில் 40 வயதுக்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே ஒருவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அவர் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைமையிடம் அனுமதி கோரியபோது யோகேஸ்வரனின் செவிப்பறை வெடித்துள்ளது. ஆங்கிலம் தெரியாமல் லண்டன் சென்று மானத்தை கப்பலேற்ற போறீரோ என கேட்டகப்பட்டாராம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் நின்று விடவில்லை பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு பிரதேச சபைச் தலைவர் ஒருவரை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது. அத்தேர்வு எவ்வாறு இடம்பெற்றது. அவர் சுரேஸ் அணியைச் சேர்ந்தவரா? சம்பந்தன் அணியைச் சேர்ந்தவரா? அன்றில் சுபந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரா என்பதெல்லாம் கேட்க்கக்கூடாது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் ஆங்கிலம் பேசுவாராம் எனச்சொல்லி பிரித்தானிய வீசாவிற்கு அனுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கானது என்ற கூறப்பட்டு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகிர்தர் என்ற வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் பாஸ்போர்டில் றிஜெக்ட் சீலை குத்தி கொண்டு வெளியில் வந்தவுடன், பிறிதொருவர் வெளியில் பாஸ்போர்டுடன் நின்றுள்ளார். அவருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட குழுவுடன் லண்டன் சென்று மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்.



இவர் யார்? இவர் பெயர் ரகு பாலச்சந்திரன். சுமந்திரனின் நெருங்கிய சகாவாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசியமும் எங்கே போகின்றது. மக்கள் பிரதிநிதி ஒருவரை ஆங்கிலம் தெரியாது என நிராகரிக்கின்றார்கள். அதேநேரம் ஆங்கிலம் தெரிந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர் ஒருவரை வீசா கேட்டு அனுப்புகின்றார்கள். பிரித்தானியா வீசாவை நிராகரிப்பதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா சுமந்திரனின் சகாவிற்கு அதே நிகழ்வில் பங்கேற்பதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசத்திலிருந்து , மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின்தங்கியவராகவே இருக்கவேண்டும். ஆங்கிலம் பேசத்தெரிந்த மேல்தட்டு வர்க்கத்தினராகிய நாங்கள் சகலவற்றையும் பார்த்துக்கொள்வோம் , மக்கள் எங்களுக்கு வாக்குப்போட வேண்டும், அத்துடன் நீங்கள் தெரிவு செய்கின்றவர்கள், நாங்கள் சொல்லற பக்கத்துக்கு தலையாட்டவும், கைதூக்கவும் தயாராகவிருக்கவேண்டும், மீறினால் செவிப்பறை வெடிக்கும் எனச் செயல்படுகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை.

1 comments :

ARYA ,  December 16, 2011 at 1:51 AM  

இதற்கும் பிறகு வடக்கு கிழக்கு இணைப்பு மீண்டும் வேண்டுமா ? பிரபாஹரனால் உருவாக்கபட்ட TNA புலியின் கொள்கையிலேயே உள்ளது என்பதை ஸ்ரீலங்கன் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் ? இல்லையேல் அன்டன் பாலசிங்கம் சொன்னது போல சிங்கள மக்கள் முட்டாள்களா ???????????

Then north and east to link it again? Sri Lankan government's theory that the tiger is formed by pirapaharan TNA to understand? Or, as Anton Balasingham said the LTTE fools people ???????????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com