Tuesday, November 15, 2011

TV ரிப்போர்டரான கிளிண்டன் மகள்

அமெரிக்க மாஜி அதிபர் பில் கிளிண்டன்- அந்நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தம்பதியனரின் மகள் செல்சியா கிளின்டன் NBC (National Broadcasting Company) தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தில் சிறப்பு செய்தியாளர் பணியில் சேர்ந்துள்ளார். என்.பி.சி., தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான "மேக்கிங் ஏ டிபரன்ஸ்" ( Making A Difference) நிகழ்ச்சிக்காக செல்சியா சிறப்பு செய்திகளை தருவார் என்று தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போற்றுதற்குரிய நற்செயல்களை செய்யும் தனிநபர்கள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் செல்சியா செய்திகள் வழங்குவார் என்றும் அவை "நைட்லி நியூஸ்" நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனவும் அந்நிறுவன தலைவர் ஸ்டீவ் கார்பஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், செல்சியா கிளின்டன் ஒரு சிறந்த பெண்மணி. அவரது சேவையால் என்.பி.சி., நிச்சயம் பயனடையும் என தான் நம்புவதாகவும், பணியில் அர்ப்பணிப்பு, தனித்திறமை ஆகியனவற்றால் செல்சியா என்.பி.சி.,க்கு சிறப்பான செய்திகளை தருவார் என தாங்கள் நம்புகிறோம் எனவும் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் செல்சியாவின் முதல் நியூஸ் கவரேஜ் எப்போது ஒளிபரப்படும் என்பது குறித்தோ, அது எதைப் பற்றி இருக்கும் என்பது குறித்தோ என்.பி.சி., நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

31 வயதாகும் செல்சியா கிளிண்டன் தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார். சுகாதார படிப்பில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயின்றார். இதற்கு முன்னர் மெக்கின்சி அண்ட் கோ என்ற கல்சன்டிங் நிறுவனததில் பணியாற்றியுள்ளார். இவை தவிர தனது தந்தையின் தொண்டு நிறுவனப் பணிகளையும் அமெரிக்கன் பேலேட் பள்ளியின் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  November 15, 2011 at 6:00 PM  

May be the next a democratic presidential candidate or to the senate.Who knows......?
Good luck.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com