Tuesday, November 15, 2011

பகிடி வதையில் ஈடுபடுவோர் 3 வருடங்களுக்கு தடை. SB

பகிடி வதை நடவடிக்கையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித்தகமை நீக்கப்படுவதுடன் சுமார் மூன்று வருட காலத்திற்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் கடந்த முப்பது வருடகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஜே.வி.பி யின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்ததாகவும், இதன்போது அநாவசிய அரசியல் தலையீடுகள் தலையீPடுகள் காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களில் தற்போது சுமுக நிலை காணப்படுகிறது பேராதனை , மற்றுமட் றுகுணு பல்கலைக்கழகங்களிலேயே பகிடி வதை அதிகரித்த காணப்படுகிறது, இதனை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்படுகிறது, ஆயினும் தற்போது 99 சதவீதம் பகிடி வதை குறைந்துள்ளது, பகிடி வதையை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

...............................

1 comments :

Anonymous ,  November 15, 2011 at 5:56 PM  

Why not these undergraduates realize
that bullying is a kind of
psychological torture.Bullying is a serious problem in the universities.
They come out as graduates, a highly educated society,whereas what they do during their graduation using strength or power to frighten or hurt
the new comers.This cannot be a fun,a kind of petty jealousies over the new comers.Severe punishments,dismissals are the best ways to treat these guys.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com