Friday, November 11, 2011

வாக்காளர் பதிவுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்பத்தினை பயன்படுத்தி கொள்ளுங்கள். பெவ்ரல்

2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்வதற்கு உள்ள இறுதி வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெவ்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கும் அதனை நீக்குவதற்கும் தேவையான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ள விபரங்கள் அடங்கிய அறிக்கை இம்மாதம் 2 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச தேர்தல் அலுவலகம், கிராம சேகவர் அலுவலகம், தபால் அலுவலகம், மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் இந்த ஆவணம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை பார்வையிட்டு தங்களது பெயர்கள் அதில் இடம்பெறா விட்டால் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். குறித்த ஆவணம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே விண்ணப்பப்பத்திரம் ஒன்றை உரிய வகையில் பூர்த்தி செய்து உதவி பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூல் நிலையம், திறந்து வைக்கப்பட்டது. லிட்டில் ஏட் சரிட்டி பிரதிநிதி டொரின் கொஸ்டன்டைன், இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மாணவர்கள், கல்வியை தூர நோக்கோடு பார்க்க வேண்டும். கல்வியை மேம்படுத்துவதற்கு, நூலக வசதிகள் தேவைப்படுகின்றன. இங்குள்ள நூல்களை பயன்படுத்துவதன் மூலம், அறிவினை விருத்தி செய்ய முடியுமென, நிகழ்வுக்கு தலைமை தாங்கிய யாழ். ஒஸ்மானிய கல்லூரி அதிபர் எம்.எஸ். முபாறக் தெரிவித்தார். போர்ச்சூழலினால் எமது கல்லூரியில் பல சிதைவுகள் காணப்படுகின்றன. இதனையும், சீர் செய்வதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com