Sunday, November 13, 2011

வன்னி மக்களின் கால்நடைகளை கடத்தும் அரசியல்வாதி.

இறுதிப்போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியில் காடுகளில் உள்ள மாடுகளை கூட்டம் கூட்டாக தென்பகுதிக்கு எடுத்துச்செல்லும் மோசடியில் வன்னி அரசியல் வாதியொருவர், நாளாந்தம் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் கிடைத்துள்ளன. ஒட்டுசுட்டாண் முதல் முல்லைதீவு வரை உள்ள பகுதியில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதாகவும், இந்த கால்நடைகளை இராணுவ காவலரண்களுடாக எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட போதும், காவலரண்களை தவிர்த்து, இந்த கால்நடைகளை காடுகளுடாக எடுத்துச்சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த அரசியல் வாதியின் தலையீட்டுடன் அவரது சகோதரர் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களும் இவற்றை எடுத்துச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மிக பக்திபூர்வமாக இந்த கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இக்கடத்தலுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  November 13, 2011 at 6:16 PM  

Politicians turn into cattle dealers.
Cattle dealers may turn into politicians.Opportunists cannot be
politicians,because a real politician
is a person who sacrifice himself for the sake of the nation,for the sake of the people he represents.Can you judge a book by its cover.....?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com