Sunday, November 13, 2011

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களும் மரணங்களும்

இலங்கையில் நாலரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒரு வீதி விபத்து இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஒருவர் வீதம் இறப்பதாகவும் ஏறக்குறைய ஆறு வாகன விபத்துக்கள் தினமும் இடம் பெறுவதாகவும் இதில் மூன்று பேர் தினமும் காயத்திற்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை இடம் பெற்ற வீதி விபத்துக்களில் 2086 பேர் காயமடைந்துள்ளனர்.69 பேர் உயிரிழந்துள்ளனர்.இக்காலப் பகதியில் 448 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் ,171 முச்சக்கர வண்டி விபத்துக்களும், 69 பஸ்ஸூடன் சம்பந்தப்பட்ட விபத்துக்களும் , 218 பாதசாரிகள் விபத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

இதேவேளை, வீதி விபத்துகள் காரணமாக வருடாந்தம் இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து 500 வரையிலானவர்கள் நாட்டில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் வருடாந்தம் சுமார் எண்பதாயிரம் வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

இதில் சுமார் முப்பதாயிரம் விபத்துக்கள் பாரதூரமானவை என்பதுடன் வீதி விபத்துக்களினால் நாளாந்தம் ஆறு பேர் வரை உயிரிழப்பதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எமது நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் புதிதாக வீதிக்கு வருவதாக மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 148 மோட்டார் சைக்கிள்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி மாதத்திற்கு கிட்டத்தட்ட 20525 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனடிப்டையில் ஒரு தினத்திற்கு 933 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்திற்கு வேலை செய்யும் நேரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 117 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் அது கிட்டத்தட்ட நிமிடத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்ற எண்ணிக்கையில் இருப்பதாகவும் மோட்டார் வாகனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2005 மதல் 2011 ஆம் ஆண்டு ஜூன் வரையான காலப் பகதிக்குள் 19 இலட்சம் வாகனங்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் அதிகளவானவை மோட்டார் சைக்கிளாகும்.

1 comments :

Anonymous ,  November 13, 2011 at 6:02 PM  

Why not the traffic system of Srilankan police follow the western traffic system.There is no difficulty in obtaining a driving licence in our countries,because the back door is always opened.Zebra crossing,speed limit colour lights only for the name sake,the drivers and riders take the upper hand and drive the vehicles in excessive speed.Specially in Jaffna "My God"
the motor bike riders and the mini van drivers,not that they drive they just fly.It's absolutely the fault of the traffic police.Ignorance of the traffic police lenient
judgements,back door influence are the cause of these serious traffic crimes.
It can be stopped but the respective authorities must co-operate and organize a healthy project to stop this nonsence.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com