Monday, November 14, 2011

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய விவகாரம் தொடர்பான பரிசோதனை மற்றும் பயிற்சி மத்திய நிலையம் மற்றும் கொழும்பு , தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய விவகாரம் தொடர்பான பரிசோதனை மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் விற்பனை நிலையப் பிரிவின் அதிகாரி டப்லியூ. எம். துமிந்த பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், நவம்பர் 9 ம் திகதியிலிருந்து போஞ்சியின் விலை 50 வீதம் குறைந்துள்ளதாகவும் மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 30 வீதம் கூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் கருவாடுகள் கீழ் மட்டத்தில் உள்ளன. அத்துடன் நெத்தலி, கட்டா, மற்றும் தோரா கருவாடுகளின் விலை நூற்றுக்கு 20 வீதம் கூடியுள்ளன. தோரா மீன் நூற்றுக்கு நூறு வீதம் கூடியுள்ளது. இது தற்பொழுது நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகள் பெரும்பான்மையாக மொத்த தொகைக்கு நூற்றுக்கு 30 வீதம் அளவும் சில்லறை விலைக்கு நூற்றுக்கு 50 வீதம் அளவும் கூடியுள்ளது. ஒவ்வொரு வருட இறுதிக் காலகட்டத்தின் போது இந்த நிலை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மெனிங் வர்த்தக நிலையத்தின் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே கருத்துத் தெரிவிக்கையில், கருவாடுகள் மற்றும் ஊர் மரக்கறிகளின் விலைகள் நூற்றுக்கு 50 வீதம் கூடியுள்ளதாக தெரிவித்தார்.'லக் சதொச' நிறுவனத்தின் தலைவர் நளீன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், சீனி மற்றும் பருப்பு உட்பட பெரும்பான்மையான அத்திவசியமான உணவுப் பொருட்களின் விலை விரைவில் குறையவுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com