Wednesday, November 16, 2011

முஸ்லிம் மக்களின் காணிகளை அதிகார வர்க்கத்தினர் சிலர் கபளீகரம் செய்கின்றனராம்.

வடக்கில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களின் காணிகளை அதிகார வர்க்கத்தினர் சிலர் கபளீகரம் செய்கின்றனர். என்று வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த அநீதியை அதிகார வர்க்கத்தினர் திட்டமிட்டுச் செய்கின்றனரா அல்லது தெரியாமல் செய்கின்றனரா? என்று தெரியவில்லை. இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க அமைச்சர் பதவி தடையாக இருந்தால் தூக்கி வீசவும் தயங்கமாட்டேன். மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவேன் என்றார் அமைச்சர்.

திருகோணமலை மாவட்ட புல்மோட்டை அல்அறபா பாடசாலையில் குச்சவெளி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கூறிவை வருமாறு:

வடக்கில் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் தலைமன்னாரில் மீள்குடியேறுவதற்காக அவர்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளைத் துப்புரவு செய்ய முற்பட்டபோது அதற்கு பொலிஸார் தடை போட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் முறையிடுகின்றனர். நாட்டின் பல பாகங்களில் வாழ்ந்த மக்கள் சமாதான சூழலையடுத்து, தமது மண்ணில் இந்த மக்கள் குடியேறி வருகின்றனர். அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் வந்து குடியமர தடைகள் ஏற்படுத் தப்படு கின்றன. இவ்வாறு காணப்படுமெனில் அவர்கள் எங்கு செல்வார்கள்?

நாம் அரசியல்வாதிகள் என்ற வகையில் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கின்றோம். இந்தப் பதவியை அமைச்சர் அல்லது சபைத் தலைவர், அரசியல்வாதிகள் என்பதற்காக அவர்களுக்குப் பயந்து வாழ முடியாது. எமது உரிமைகள் பறிக்கப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முற்பட வேண்டும். அது அடாவடித்தனமானதாக இருக்கக்கூடாது.
விட்டுக்கொடுப்பு, விடா முயற்சி, சகிப்புத்தன்மை என்பன எமது மத்தியில் ஏற்படவேண்டும். நாம் ஒன்றை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளை ஏனையவர்களிடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அதனால் எமது சமூகம் பல நஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. இந்த நாட்டின் ஜனாதிபதி இனவாதியல்லர். மக்கள் துக்கம் அறிந்த சிறந்த மனிதர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். ஆனால், சில அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இனவாதச் சிந்தனையுடன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அதனைக் களைவதற்குப் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்திலும், சர்வதேசத்திலும் பேசுவதற்கான சூழல் ஏற்படுமெனில் அதனை இந்தச் சமூகத்துக்காக செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.இப்படி அவர் தெரிவித்தார்

செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com