Wednesday, November 16, 2011

நிறுவனங்களை சுவீகரிக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சுவீகரிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் மற்றும் செயலிழந்த தனியார் நிறுவனங்களை அரசு பொறுப்பேற்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்மானித்தது.

இம்மனுக்களை விசாரிப்பதற்கு போதுமான, சாதகமான அம்சங்கள் மனுக்களில் காணப்படாமையினால் இவற்றை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் குழுவின் தலைவர் நிமால் காமினி அமரத்துங்க தெரிவித்துள்ளார்.

நிமால் காமினி அமரதுங்க எஸ்.ஐ.எம் இமாம், ஆர்.கே.எஸ் சுரேஸ், சந்திர சத்யா ஹெட்டிகே, பரியசாத் டெப், ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவே இவ்வாறு தெரிவித்துள்ளது.

நுகெகொட நளந்தாராம விகாராதிபதி சங்கைக்குரிய நீதியாவள பாலித்த தேதேரா, செவனகல சீனிக்கம்பனியின் ஊழியர் சிலர், கரும்பு விவசாயிகள் சிலர் ஆகியோரே வாதிகளாவர். நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, அமைச்சரவை சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com