Wednesday, November 16, 2011

ஹெரோயின் வர்த்தகரை அடையாளம் காண உதவுமாறு பாதுகாப்பு தரப்பினர் வேண்டுகோள்

ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாரியளவில் ஹேரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள காதர் மொஹிதீன் மொஹமட் அஸ்மின் அல்லது அஸ்மீ மாமா எனப்படும் இந் நபரை இனங்காண்பதற்கு உதவுமாறு பாதுகாப்பு பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹெரோயின் வர்த்தகத்திற்கு மேலதிகமாக திட்டமிட்ட குற்றச்சாட்டுக்களிலும் இவருக்கு தொடர்பு உண்டென தகவல்கள் வெளிவந்துள்ளன. இச்சந்தேக நபர் தொடர்பான உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இச்சந்தேக நபர் தொடர்பான தகவல்களை 011 2 66 23 11 , 011 2 43 14 28 , 011 2 66 23 23 011 2 43 71 56 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்கலாமென ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com