Sunday, November 27, 2011

பல்கலை விரிவுரையாளர் மீண்டும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் சேதசிறி குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசாங்கத்துடன் தாம் ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. ஆயினும், இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை.

அத்துடன், பல்கலைக்கழகத்தின் உள்ளக பாதுக்காப்பு குறித்து இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை. கல்விக்காக அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய முக்கிய கவனம் தொடர்பில் தாங்கள் முன்வைத்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்காரணமாக, எமது கோரிக்கைகளை மீளவும் வலியுறுத்தியும் மற்றும் ஏனைய காரணங்களை முன்வைத்தும் எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் சேதசிறி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com