Friday, November 11, 2011

ஈரானின் அணுவாயுத சர்ச்சை தொடர்கின்றது.

அணுவாயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை, ஈரான் மறுத்துள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அணுவாயுத உற்பத்திகளில் ஈரான் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா, தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்த சர்வதேச அணுசக்தி மையம், அமெரிக்காவின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டை, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாட், முற்றாக நிராகரித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி மையம் வெளியிட்ட அறிக்கையின் மூலம், தனது நம்பக தன்மையை இழந்துவிட்டதாக, ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி மையத்தின் அறிக்கையை தொடர்ந்து, ஈரான் மீதான பொருளாதார தடைகளை மேலும் தீவிரப்படுத்தத வேண்டுமென, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அதற்கு ஒரு படி மேல் சென்று, ஈரான் மீது தாக்குதல் நடாத்த வேண்டுமென. இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த யோசனையை, ஜேர்மனி நிராகரித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி மையத்தின் அறிக்கையை சாட்டாக வைத்து, அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் மீது தாக்குதல் நடாத்த, திட்டமிட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள், இதற்கு எதிராக இருப்பதனால், ஈரான் மீதான தாக்குதல் பல்வேறு அஞ்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்துமென, அறிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com